பக்கவாதத்தின் பின்விளைவுகள்: அறிவுத்திறன் சார்ந்த பிரச்சினைகள்

Understanding cognitive issues after stroke 

அறிவுத்திறன் என்பது சிந்திக்கும் செயல்முறையைக் குறிக்கிறது.  இது உங்கள் மூளை எவ்வாறு தகவல்களைப் புரிந்துகொள்கிறது, ஒழுங்கமைக்கிறது, சேமிக்கிறது மற்றும் மீட்டெடுக்கிறது என்பது பற்றியதாகும். பக்கவாதத்திற்குப் பிறகு அறிவுத்திறனில் சிரமங்கள் ஏற்படலாம். நீங்கள் அனுபவிக்கும் அறிவுத்திறன் பிரச்சினைகளின் வகையானது, பக்கவாதத்தால் ஏற்படும் மூளை சேதத்தின் அமைவிடத்தைப் பொறுத்து இருக்கும்.

பக்கவாதம் எனது அறிவுத்திறனை எவ்வாறு பாதிக்கிறது?

நினைவகப் பிரச்சினைகள்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் தங்களுக்கு நினைவகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகப் பலர் புகார் கூறுகின்றனர். தகவல்களைச் செயல்முறைப்படுத்த அல்லது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு அதிக நேரம் தேவை என்பதை நீங்கள் கவனிக்கலாம்.

நினைவகச் செயல்முறை 3 கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

Cognitive_P1_head2.png

 

கட்டம் 1: தகவல்களை அறிதல்

கட்டம் 2: காலப்போக்கில் தகவல்களைத் தக்கவைத்தல்

கட்டம் 3: தகவல் மீட்பு

 

நினைவகம் இரண்டு பரந்த பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை குறுகிய கால நினைவகம் மற்றும் நீண்ட கால நினைவகம்.

இங்கு இந்தப் பிரச்சனைகள் குறித்து சில உதாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன:

குறுகிய கால நினைவகம்:

நீண்ட கால நினைவகம்:

உங்களிடம் ஒருவர் என்ன கூறினார் அல்லது நீங்கள் என்ன செய்யவந்தீர்கள் என்பதை நினைவு வைத்துக்கொள்வதில் சிரமம்.

பழக்கமான இடங்களில் தொலைந்து போவது அல்லது பழக்கமான பணிகளைச் செய்ய அதிக நேரம் எடுப்பது.

 

சில நினைவகப் பிரச்சனைகள் கவனிப்பதில் சிரமம் இருப்பதால் ஏற்படுகின்றன. உரையாடல் அல்லது பணியின்போது உங்களால் கவனம் செலுத்த முடியாவிட்டால் உங்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளவோ ​​/ செய்யவோ முடியாது.

Cognitive_P2_memory problems.png

கவனிப்பதில் சிரமம் இருப்பதன் காரணமாக ஏற்படும்  நினைவக சிக்கல்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் சிரமம்.
  • வேலைகளை செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்வது.
  • தடங்கல் ஏற்பட்ட பிறகு ஒரு வேலையை மீண்டும் தொடர்வதில் சிரமம்.

செயல்பாட்டை நிர்வகிப்பதில் சிக்கல்கள்

தகவல்களை எடுத்து சேமித்து வைப்பது போலவே, நமது மூளை பல வகையான சிந்தனை செயல்முறைகளை மேற்கொள்கிறது. செயல்பாட்டை நிர்வகிப்பதில் சிக்கல்கள் இருந்தால், குறிக்கோள்களை அடைய தங்களை நிர்வகிக்கவும் ஒழுங்கமைக்கவும் ஒரு நபருக்கு இருக்கும் திறனை பாதிக்கும்.

சில செயல்பாட்டு நிர்வகிப்புச் செயல்முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

Cognitive_P2_ImpulseControl.png
தூண்டல் கட்டுப்பாடு

கட்டுப்படுத்தும் திறன் மற்றும் செயல்படுவதற்கு முன் யோசித்தல்

Cognitive_P2_SelfMonitoring.png
சுய கண்காணிப்பு

உங்கள் செயல்திறன் அல்லது நடத்தையை சுய மதிப்பீடு செய்யும் திறன்

Cognitive_P2_Planning.png
திட்டமிடல்

ஒரு வேலையை செய்ய அனைத்துப் படிகளையும் திட்டமிடக்கூடிய திறன் அல்லது அப்படிகளைச் சரியான வரிசையில் மேற்கொள்ளும் திறன்

Cognitive_P2_WorkingMemory.png
செயற்பாடு நினைவகம்

தகவல்களை மனதில் வைத்திருக்கும் திறன்

Cognitive_P2_Initiation.png
தொடங்குதல்

ஒரு வேலையைத் துவங்குவதற்கான திறன்

Cognitive_P2_FlexibilityControl.png
வளைந்து கொடுக்கும் தன்மை கட்டுப்பாடு

சூழ்நிலை மாற்றங்களை ஏற்கும் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்.

Cognitive_P2_EmotionalControl.png
உணர்வு சார்ந்த கட்டுப்பாடு

உங்கள் உணர்வுகளை நிர்வகிக்கும் திறன்

Cognitive_P2_Organisation.png
அமைப்பு

வேலை அல்லது பல செயல்களை நிர்வகிக்கும் திறன்

 

பொருட்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் (அக்னோசியா)

உங்கள் மூளை 2 நிலைகளில் பொருட்களை அடையாளம் காண்கிறது.

Cognitive_P3_Cup of drinking water.png

 

கட்டம் 1 

ஒரு பொருள் தோற்றமளிக்கும், உணரச்செய்யும் மற்றும் ஒலிக்கும் விதம் குறித்து உங்கள் புலன்களிடமிருந்து தகவல்களைப் பெறுதல்.

கட்டம் 2

  • பெறப்பட்ட தகவல்களை உங்கள் நினைவகத்தில் உள்ள தகவலுடன் ஒப்பிடுதல்.
  • அந்தப் பொருள் என்னவென்று அழைக்கப்படுகிறது, அது என்ன செய்கிறது என்பது பற்றிய தகவல்களை இது உங்கள் நினைவகத்திலிருந்து மீட்டெடுக்கிறது.

மொழி சிரமங்களுக்கும் அக்னோசியாவுக்கும் இடையில் வேறுபாடு காண்பது பெரும்பாலும் கடினமாக இருக்கும்.

அக்னோசியா உங்களை மிகவும் குறிப்பிட்ட வழிகளில் பாதிக்கலாம். ஒரு உதாரணமாக கோப்பையைப் பயன்படுத்துவோம், அக்னோசியா உள்ளவர்கள் பின்வருவனவற்றை அனுபவிக்கலாம்.

  • ஒரு கோப்பையைப் பார்த்து அதை அடையாளம் காண முடியாவிடிலும், அவர் தொடு உணர்வால் அதை அடையாளம் காணக்கூடும்.
  • அவரால் கோப்பையின் தோற்றம் அல்லது பயன்பாட்டை விவரிக்க முடியும், ஆனால் அது ஒரு கோப்பை என்று சொல்ல முடியாது.

அறிவுத்திறன் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

அறிவுத்திறன் பரிசோதனை

Cognitive_P4_CogntiveScreening.png

அறிவுத்திறன் பரிசோதனை என்பது உங்கள் நினைவகம் மற்றும் பிற சிந்தனை திறன்களை மதிப்பீடு செய்ய உதவும் ஒரு எளிய கருவியாகும். இது ஒரு விரிவான அறிவாற்றல் மதிப்பீடு தேவையா என்பதை குறிக்க உதவுகிறது.

எந்தவொரு குறிப்பிட்ட அறிவுத்திறன் நோயையும் கண்டறிய அறிவுத்திறன் பரிசோதனைப் பயன்படுத்தப்படுவதில்லை, மேலும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவதற்கு மாற்றீடாக இது இருக்காது. அறிவுத்திறன் சிக்கல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டால், விரிவான அறிவுத்திறன் மதிப்பீட்டிற்கு உங்கள் மருத்துவரிடம் நீங்கள் பின்தொடர்வு சந்திப்பை மேற்கொள்ள வேண்டும்.

 

முழு அறிவுத்திறன் மதிப்பீடு

Cognitive_P4_fullcognitiveassessment.png

விரிவான அறிவுத்திறன் மதிப்பீட்டிற்கு நீங்கள் பரிந்துரைக்கப்படலாம். இது பொதுவாக ஒரு மருத்துவர், செவிலியர், ஒரு தொழில்சார் சிகிச்சையாளர் (OT) அல்லது ஒரு உளவியலாளரால் செய்யப்படுகிறது. உங்கள் பக்கவாதம் பராமரிப்புக் குழு உங்களுக்கு உதவ சிறந்த வழியை தீர்மானிக்க இதன் முடிவுகள் உதவும் என்பதால் மதிப்பீட்டைச் செய்வது முக்கியம்.

 

 

Cognitive_P4_Will it get better.png

 

அது சரியாகுமா?

சிலருக்கு, அறிவுத்திறன் சிக்கல்கள் தன்னிச்சையாக அல்லது மறுவாழ்வு அளித்தல் மூலம் காலப்போக்கில் மேம்படக்கூடும். மற்றவர்களுக்கு, அது மாறாமல் அப்படியே இருக்கக்கூடும், சிலருக்கு அது மோசமடையக்கூடும்.

உதவக்கூடிய நிர்வகிப்பு முறை ஏதேனும் உள்ளதா?

அறிவுத்திறன் சிக்கலின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, சிகிச்சையானது மேம்படுத்த அல்லது சிக்கல்களை சமாளிப்பதற்கான வழிகளில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது.

 

மறுவாழ்வு உத்திகள்

Cognitive_P5_Rehabilitation.png

ஒரு நரம்பியல் உளவியலாளர் மற்றும்/அல்லது ஒரு தொழில்சார் சிகிச்சையாளர் (OT) உங்கள் நினைவகம் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்த சில அறிவுத்திறன் பயிற்சிகளைக் கற்பிக்க முடியும். அறிவுத்திறன் பயிற்சிகளை வழங்குவதில் கலை அல்லது இசை சிகிச்சையாளரும் ஈடுபடலாம். இந்த அறிவாற்றல் பயிற்சிகள் அறிவாற்றலை மேம்படுத்த கண்டறியப்பட்ட விளையாட்டுகள், புதிர்கள் மற்றும் தினசரி செயல்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.

 

ஈடுசெய்யும் உத்திகள்

Cognitive_P5_Compensatory.png

ஈடுசெய்யும் உத்திகள் என்பவை சிக்கல்களைச் சமாளிக்க உங்களுக்கு ஆதரவளிக்கும் உத்திகளாகும். இவை உங்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்கிற அவசியமில்லை. தினசரி அட்டவனை மற்றும் நினைவகக் குறிப்பேடு போன்ற உதவிக் கருவிகளைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.

 

Article available in English, Chinese and Malay.

For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.

Back to Top