Coping with cognitive issues after stroke
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு அறிவுத்திறனில் சிரமங்கள் ஏற்படலாம். இது உங்கள் அன்றாட நடைமுறைகள், நீங்கள் சிந்திக்கும் விதம் மற்றும் முடிவெடுக்கும் விதம் ஆகியவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது சவாலானதாகத் தோன்றினாலும், உங்கள் அறிவுத்திறன் சிரமங்களை மேம்படுத்தவும் சமாளிக்கவும் உங்களுக்கு உதவும் வழிகள் உள்ளன.
மனப் பயிற்சிகள் மன விழிப்புணர்வையும் கவனத்தையும் மீண்டும் உருவாக்க உதவக்கூடும். உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கக்கூடிய சில செயல்பாடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
எதையேனும் புதிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்
| |
புதிய பொழுதுபோக்கை மேற்கொள்ளுங்கள்இது எந்தளவிற்கு சவாலானதாக இருக்கிறதோ, இது அந்தளவிற்கு உங்கள் மூளைக்கு நன்மை தரும். | |
சிந்தனையைத் தூண்டும் விளையாட்டுக்களை விளையாடி மகிழுங்கள்
|
பக்கவாதத்திலிருந்து பிழைத்தவருக்கு அறிவுத்திறன் சிரமங்கள் இருக்கலாம், ஆனால் அந்த நபருக்கு முதுமை மறதிநோய் இருக்கிறது என்று அர்த்தமல்ல. பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர் தனது நிதிகளைக் கையாளுதல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்தல் போன்ற தினசரி செயல்பாடுகளை சுதந்திரமாகச் செய்வதற்கான திறனை பாதிக்கும் அளவிற்கு அவரது அறிவுத்திறன் சிரமங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே அவருக்கு முதுமை மறதிநோய் இருப்பதாகக் கருதப்படும். இதன் விளைவாக, அவர்கள் இனிமேல் இந்தச் செயல்களைச் செய்ய மாட்டார்கள் அல்லது அவர்களின் அறிவுத்திறன் சிரமங்கள் காரணமாக இந்தச் செயல்பாடுகளைச் செய்ய அவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும்.
அறிவுத்திறன் சிரமங்களைக் கொண்ட பக்கவாதத்திலிருந்து பிழைத்தவருக்கு இன்னும் மனத் திறன் இருக்கலாம். இருப்பினும், அவரால் அவரின் நிதிப் பொறுப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளவோ அல்லது அவரின் தனிப்பட்ட நலனைப் பற்றி முடிவுகளை எடுக்கவோ முடியாவிட்டால், அவருக்கு மனத் திறன் இல்லாமல் போகலாம்.
நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) என்பது ஒரு சட்ட ஆவணமாகும், இது உங்கள் தனிப்பட்ட நலனைப் பற்றி முக்கியமான முடிவுகளை இனி உங்களால் எடுக்க முடியாது என்கிற நிலையில் முக்கியமான முடிவுகளை எடுக்க ஒரு நபரை நியமிக்கிறது. முன்கூட்டிய வழிகாட்டுதல்கள் (உயிருடன் இருக்கும் போதே உயில் எழுதி வைப்பது போன்றவை) என்பவை உங்கள் விருப்பங்களை நீங்கள் தெரிவிக்க முடியாவிட்டால் அவற்றை வரையறுத்துக் காட்டும் சட்ட ஆவணங்களும் ஆகும்.
நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) என்றால் என்ன?
பொதுக் பாதுகாப்பாளர் அலுவலகம்
தொடர்புகொள்க: 1800 111 2222
மின்னஞ்சல்: enquiry@publicguardian.gov.sg
இளையத்தை ம்: www.msf.gov.sg/opg
Advance Medical Directive (AMD)
Website: https://www.moh.gov.sg/policies-andlegislation/
advance-medical-directive
| சிங்கப்பூர் தேசிய பக்கவாதம் சங்கம் (SNSA) பக்கவாத நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் சமூகத்தில் மீண்டும் அவர்களை ஒன்றிணைக்க பயணங்களை ஏற்பாடு செய்கிறது. பக்கவாத நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் உணர்ச்சிசார்ந்த மற்றும் சமூகம்சார்ந்த ஆதரவை வழங்க பக்கவாத ஆதரவு குழுக்களும் உள்ளன. |
இளையத்தைம்:: http://www.snsasg.org மின்னஞ்சல்:contact@snsa.org.sg நேரடித்தொலைபேசிஎண்: +65 8125 1446 | |
| S3 என்பது 2015ல் நிறுவப்பட்ட சிங்கப்பூரின் முதல் - பக்க வாதத்தை முதன்மை கருத்தில் க ொண்டு இயங்கும் சமூக மறுவாழ்வு மை யம் மற்றும் ஆர ோக்கிய நிறுவனம் ஆகும் . சிங்கப்பூரில் உள்ள பக்கவாதத் தால் பாதிக்க பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் தே வை களை கருத்தில் க ொண்டு அதை நிவர்த்தி செ ய்வதே இந்நிறுவனத்தின் குறிக்க ோள் ஆகும். S3யுடன், புனர் வாழ்வின் வாயிலாக பக்கவாதத்தால் இருந்து குணம் அடை ந்தவர்களுக்கு த ொடர்ச்சியாக பராமரிப்பு கிடை ப்பது சாத்தியம் ஆகிறது. இந்த மறுவாழ்வு, மே ம்பட்ட மறுவாழ்வு த ொழில் நுட்பங்கள் மற்றும் மரபுமுறை சிகிச்சை கள் அது மட்டும் அல்லாமல் எங்களது தனித் துவமான - அறிவாற்றலை யும் சமூக உளவியல் வளர்ச்சியை யும் மனதில் க ொண்டு செ யல்படும் S3 ஆர ோக்கிய திட்டத்தின் உதவியுடன் செ யலாற்றி அதிகபட்ச மீட்பு திறன், தனித்து செ யல் படுதல், மற்றும் மறு ஒருங்கிணை ப்புக்கு வழிவகுக்கிறது. S3 நிறுவனம் த ொடர்ச்சியாக கூட்டு நிறுவனங்களின் உதவியுடன், பக்க வாதத்தில் இருந்து விடு பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள், த ொண்டர்கள், பங்குதாரர்கள் ஒன்று சே ர்த்து பக்க வாதம் தடுப்பு குறித்த விழிப்புணர்வை நமது பரந்த சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. |
இளையத்தைம் : http://www.s3.org.sg/ மின்ன ஞ்சல்: info@s3.org.sg நேரடித்தொலைபேசிஎண்: +65 64733500 | |
| டிமென்ஷியா சிங்கப்பூர் 1990-இல் அல்சைமர் நோய் சங்கமாக உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் வளர்ந்து வரும் டிமென்ஷியா சமூகத்திற்குச் சிறப்பாகச் சேவை செய்யவும், டிமென்ஷியா பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், மற்றும் மக்களிடையே அந்நிலைமையைச் சுற்றியுள்ள களங்கத்தைக் குறைக்கவும் இது தொடங்கப்பட்டது. சிறந்த டிமென்ஷியா பராமரிப்பில் சிங்கப்பூரின் முன்னணி சமூக சேவை நிறுவனமாக இருக்கும் டிமென்ஷியா சிங்கப்பூர், டிமென்ஷியாவுடன் வாழும் மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளுக்காகப் பரிந்து பேசுவது; டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிவும் புரிந்துணரும் திறன்களை உருவாக்குவது; டிமென்ஷியாவைப் பற்றிய பகுத்தறிவு மற்றும் ஆலோசனை மூலம் சமூகத்தை மேம்படுத்துவது; மற்றும் தரம் வாய்ந்த நபர்களை மையமாகக் கொண்ட பரிவுமிக்க பராமரிப்பு புத்தாகத்தை வழங்குவது, ஆகியவையே இதன் நோக்கங்களாகும். |
இளையத்தைம் : www.dementia.org.sg நேரடித்தொலைபேசிஎண்: +65 6377 0700 முகவரி: 20 வபண்டிமியர் தராடு, #01-02 BS வபண்டிமியர் வசன்டர், சிங்கப்பூர் 339914 |
Article available in English, Chinese, and Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
This article was last reviewed on Thursday, October 17, 2024