Post-stroke care management in smoking
புகைப்பிடிப்பது பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது இந்த அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கும். புகைப்பிடிப்பது உங்களை எவ்வாறு பாதிக்கிறது, அதிலுள்ள அபாயங்கள் மற்றும் நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த உதவும் வழிகள் ஆகியவற்றை இந்த விபரத் தாள் விளக்குகிறது.
"நீங்கள் எவ்வளவு அதிகமாக புகைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது."நிங்கள் ஒரு நாளைக்கு 20 வெண்சுருட்டு பிடித்தால், புகைப்பிடிக்காதவர்களை ஒப்பிடும் பொழது, உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு ஆறு மடங்காக உயரும். | உலகில் தடுக்கக்கூடிய மரணங்களுக்குப் புகைப்பிடிப்பதே மிக முக்கியக் காரணமாக உள்ளது.சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் சுமார் 6 பேர் புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கின்றனர். எதைத் தேர்வு செய்வது என்பது உங்கள் கைகளில் உள்ளது. |
புகைப்பிடிப்பது உங்கள் இரத்தக் கொழுப்பின் அளவை பாதிக்கிறது.சிகரெட் புகையை உள்ளிழுப்பது உங்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள நல்ல கொழுப்பை (HDL இரத்தக் கொழுப்பு) குறைக்கிறது அது கெட்ட கொழுப்பையும் (LDL இரத்தக் கொழுப்பு) அதிகரிக்கிறது. மூளைக்குப் போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காதபோது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். | புகைப்பிடிப்பது உங்கள் இதயத்தை பாதிக்கிறது.புகைப்பிடிப்பது ஒழுங்கற்ற இதய தாளம் ஏற்படும் நிகழ்வைத் தூண்டலாம். இது சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) எனப்படும் இதய நோய் நிலைமையாகும். இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 5 மடங்கு அதிகரிக்கிறது. |
புகைப்பிடிப்பது உங்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது பக்கவாதத்திற்கு முக்கிய ஆபத்துக் காரணமாகும். நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருக்கும் புகைப்பிடிப்பவராக இருந்தால், உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கும். | புகைப்பிடிப்பது வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறதுபுகைப்பிடிப்பவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம், இது பக்கவாதத்திற்கு பொதுவான ஆபத்து காரணமாகும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் உடலில் இன்சுலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது, இது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. |
கட்டுக்கதை #1: "சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்தால் போதுமானது."தவறு. சிகரெட் புகையில் 7,000 -க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 70 க்கும் மேற்பட்டவை புற்றுநோயுடன் தொடர்புடையவை. ஒரு சிகரெட் கூட உங்கள் நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களைச் சேதப்படுத்தலாம். அத்துடன் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். சிகரெட் எண்ணிக்கையைக் குறைப்பது முதல் படியாக இருக்கலாம். ஆனால் முழு ஆரோக்கியப் பலன்களைப் பெறுவது புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்துவதற்குத் திட்டமிடுங்கள். | |
கட்டுக்கதை #2: "குறைவாகத் தீங்கு விளைவிக்கும் 'வடிகட்டியைக் கொண்ட' சிகரெட்டுகளையே புகைக்கிறேன்.”தவறு. வடிகட்டியைக் கொண்ட சிகரெட்டுகள் பின்வரும் காரணங்களுக்காகப் புகைப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகளைக் குறைக்காது:
| |
கட்டுக்கதை #3: "எனக்கு ஏற்கனவே பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால், நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடத் தேவையில்லை."தவறு. பக்கவாதத்திற்குப் பிறகு தொடர்ந்து புகைப்பிடிப்பது மற்றொரு பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. | |
கட்டுக்கதை #4: “நான் மிக நீண்ட காலமாகப் புகைப்பிடித்து வருகிறேன். அதன் விளைவை மாற்றியமைத்து நலமடைவதற்கான நேரம் கடந்துவிட்டது.”தவறு. புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதில் உள்ள நன்மைகள் உடனடியாகத் தொடங்குகின்றன. 8 மணிநேரத்திற்குள், உங்கள் ஆக்ஸிஜன் அளவு மேம்படும், கார்பன் மோனாக்சைடு மற்றும் நிகோடின் அளவு பாதிக்கும் மேலாக குறையும். 2-12 வாரங்களுக்குப் பிறகு, உங்கள் சுற்றோட்டம் மேம்படுகிறது. 5-15 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தானது, புகைப்பிடிக்காதவர்களின் அளவுக்குக் குறைகிறது. | |
கட்டுக்கதை #5: "நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட முயற்சி செய்தேன், ஆனால் அதில் தோல்வியுற்றேன், எனவே இனி முயற்சி செய்வதில் அர்த்தமில்லை."தவறு. உங்கள் மனதைத் தளரவிடக் கூடாது என்பதுத்தான் மிக முக்கியமான விஷயமாகும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை வெற்றிகரமாக நிறுத்தியுள்ள பலர், அப்பழக்கத்தை முற்றிலும் விடுவதற்கு முன்பு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். நினைவில் கொள்ளுங்கள், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்குச் செய்யும் ஒவ்வொரு முயற்சியும், அப்பழக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கு எது தூண்டுகிறது என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகும். இதன் மூலம் எந்தெந்த பகுதிகளை மேம்படுத்துவது மற்றும் உங்கள் அடுத்த முயற்சியில் என்ன செய்வது என்பது உங்களுக்குத் தெரியும். | |
கட்டுக்கதை #6: "புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு மருந்துகள் உதவாது."தவறு. லோசன்ஜ்கள் (தொண்டையை குணப்படுத்துவதற்கான இனிப்பு மாத்திரைகள்), ஒட்டிகள் மற்றும் சிவிங்கங்கள் உள்ளிட்ட நிகோடின் மாற்றுச் சிகிச்சை (NRT) போன்ற சில மருந்துப் பொருட்கள் அப்பழக்கத்திற்கு மீண்டும் திரும்புவதற்கான ஆவலைக் குறைக்க உதவுகின்றன. அவற்றின் மூலம் உங்களைப் புகைப்பிடிக்க வைக்கும் காரணங்களைக் கண்டறிந்து தீர்க்க நீங்கள் கவனம் செலுத்தலாம். ஆலோசனையின் பேரில் இந்த மருந்துப் பொருட்களை எடுத்துக் கொள்வதால், நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். |
புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கான உங்கள் தனிப்பட்ட காரணங்களை எழுதுங்கள். அவற்றின் பட்டியலைத் தயாரித்து, உங்களை நீங்களே ஊக்குவிக்க நினைவூட்டுவதற்கு அதைப் படியுங்கள். | புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு ஒரு தேதியை அமைத்து அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். | ||
புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான உங்கள் திட்டத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் அவர்கள் உங்களுக்கு ஆதரவளிக்க முடியும். இது நீங்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் இருக்க உங்களுக்கு உதவும். | உங்கள் சுகாதாரப் பராமரிப்பு நிபுனர்கள் அல்லது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான ஆலோசகர்களிடமிருந்து உதவியும் ஆதரவையும் பெறுங்கள். அல்லது மேலும் உதவிக்கு நீங்கள் 1800 438 2000 என்ற எண்ணில் க்விட்லைனையும் அழைக்கலாம். | ||
நேர்மறையான எண்ணத்துடன் இருங்கள், உங்களால் முடியும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். |
சுகாதார மேம்பாட்டு வாரியம் | “QuitLine” உதவித் தொலைபேசி தொலைபேசி: 1800 438 2000 |
“ஐ குவிட் 28-டே கவுண்ட்டவுன் (I Quit 28-Day Countdown)” திட்டம் வலைத்தளம்: https://www.healthhub.sg/programmes/88/IQuit
|
Article available in English, Chinese and, Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
This article was last reviewed on Wednesday, October 23, 2024