பக்கவாதத்துக்குப் பின்னர் சமூக மற்றும் ஒய்வுநேர விஷயங்கள்: விளையாட்டுக்கள், உடற்பயிற்சி மற்றும் உடல்ரீதியான நடவடிக்கை

Post stroke activities such as sports and exercises

பக்கவாதத்திற்குப் பிறகு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால், பக்கவாதத்தினால் ஏற்படும் உடல்சார்ந்த குறைபாடுகள், உடல் சோர்வு அல்லது மனச்சோர்வு போன்றவை நீங்கள் விரும்பிய ஒரு செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்குத் தடையாக இருக்கக்கூடும்., பக்கவாதத்திற்குப் பிறகு, விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளில் பங்கேற்பதன் நன்மைகள் மற்றும் துடிப்புமிக்க இந்த பயணத்தை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றிய தகவல்களை, இந்த தகவல் தாள் வழங்குகிறது.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதின் பயன்கள் என்ன?

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அனைவருக்கும் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது, பக்கவாதத்திலிருந்து பிழைத்து வாழ்பவர்களுக்கும் பொருந்தும். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கீழ்கண்டவற்றுக்கான வாய்ப்பை வழங்குகிறது

Sport_P1_basketball.png
மற்றொரு பக்கவாதம் மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது
Sport_P1_Racket.png
நலவாழ்வையும் உடற்தகுதியையும் மேம்படுத்துகிறது
Sport_P1_shuttle.png
இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
Sport_P1_Hockey.png
உடல் வலிமையையும் தாங்குதிறனையும் உருவாக்குகிறது
Sport_P1_PingPong.png

உளவியல் நலனை மேம்படுத்துகிறது

  • வலுவான சுயமரியாதை மற்றும் மதிப்பு உணர்வை உருவாக்குகிறது
  • மனச்சோர்வு, மன உளைச்சல் மற்றும் பதற்றத்தைப் போக்குகிறது
  • உடல் குறித்த எண்ணத்தை மேம்படுத்துகிறது
Sport_P1_tennis.png

சமூகத் தொடர்பை மேம்படுத்துகிறது

  • குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவை உருவாக்குகிறது மற்றும் பலப்படுத்துகிறது
  • ஒரு குழுவாகப் பணியாற்றக் கற்றுக்கொள்வது, மக்களுடன் தொடர்புகொள்வது மற்றும் சிக்கலைத் தீர்ப்பது

 

நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

Sport_P2_Intro.png

தனிப்பட்ட ஆலோசனையைப் பெற உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். பொதுவாக, ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடல்ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் உடல் உடற்பயிற்சி வழிகாட்டியின்படி,

லேசான உடற்பயிற்சிஉடற்பயிற்சியின் போது உங்களால் பாட்டுப் பாட முடியும் அல்லது முழு வாக்கியத்தை பேச முடியும்.
மிதமான உடற்பயிற்சிஒரு சில வார்த்தைகளை பேச முடியும், ஆனால் பாட இயலாது.
கடுமையான உடற்பயிற்சிபேசுவதே கடினமாக இருக்கும்.

 

எப்படித் தொடங்குவது?

Sport_P2_Dr Med clearance.png

மருத்துவ அனுமதி பெறுங்கள்

பக்கவாதத்திலிருந்து நலமடைந்த பிறகு, எந்தவொரு விளையாட்டு அல்லது உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணரிடம் ஆலோசனைப் பெறவும். சில காலமாக நீங்கள் எந்த உடல் செயல்பாடுகளையும் செய்திருக்கவில்லை என்றால் இது மிகவும் அவசியம்.

Sport_P2_disability.png

உங்கள் பக்கவாதம் உங்களை எவ்வாறு பாதித்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்

பக்கவாதத்திற்கு முன்பு நீங்கள் சுறுசுறுப்பாக இருந்திருந்தால், முன்பு போல மீண்டும் உடற்பயிற்சி செய்வது என்பது பக்கவாதம் உங்களை எவ்வாறு பாதித்தது என்பதைப் பொறுத்தது.

 

Sport_P2_exerciseChoices.png

ஒரு செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்துத் தொடங்கவும்

நீங்கள் உங்கள் விளையாட்டு/உடற்பயிற்சிகளை சரிசெய்ய அல்லது மாற்றியமைக்கவோ அல்லது புதிய செயல்பாடுகளை முயற்சிக்கவோ வேண்டியிருக்கலாம். தீவிரம் குறைந்த உடற்பயிற்சிகளிலிருந்து தொடங்கி, பின்னர் படிப்படியாக அதிகப்படுத்துங்கள்.

பல வகையான உடற்பயிற்சிகள் பற்றிய ஆலோசனை பெறவும் மற்றும்/அல்லது உங்களுக்கு பிடித்த புதிய உடற்திறன் செயல்பாட்டைக் கண்டறியவும், உங்கள் பிசியோதெரபிஸ்ட் அல்லது தொழில்வழி சிகிச்சையாளரிடம் பேசுங்கள்.

துடிப்புடன் செயல்படுவதற்கான இப்பயணத்தை எவ்வாறு தொடங்குவது?

Sport_P3_Intro.png
  • செயல்பாட்டை அதிகரிப்பதற்கான தொடக்கமாக நடைப்பயிற்சி அல்லது வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சித் திட்டம் பரிந்துரைக்கப்படலாம்
  • வீட்டுக்கு அருகில் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள் எ.கா. பூங்கா, சமூகமன்ற உடற்பயிற்சி வகுப்புகள்
  • ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு, சிங்கப்பூர் தேசிய ஸ்ட்ரோக் அசோசியேஷன் (SNSA) மற்றும் ஸ்ட்ரோக் சப்போர் ஸ்டே (S3) போன்ற பக்கவாதம் தொடர்பான அமைப்புகளைத் தொடர்பு கொள்ளவும்.

 

Article available in English, Chinese and, Malay.

For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.

Back to Top