Post-stroke care tips to manage alcohol consumption
அதிகளவில் மது அருந்துவது உங்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். மிதமான அளவுக்கு அருந்துவது முக்கியம் அல்லது சில நிகழ்வுகளில், நன்மைகளைக் காட்டிலும் அபாயத்தின் அளவு அதிகமாக இருந்தால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பக்கவாதம் வந்த பிறகு மது அருந்துவது குறித்த தகவல்களையும், நீங்கள் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு உதவக்கூடிய உதவிக்குறிப்புகளையும் இத்தகவல் தாள் வழங்குகிறது.
நீங்கள் மது அருந்துவதை உங்கள் நோய் நிலைமை அனுமதிக்கிறதா என்பது குறித்து உங்கள் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் மது அருந்துவது உங்களுக்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் நோய் நிலைமைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்துகளுக்கும் மிகவும் மோசமான விளைவுகளையும் விளைவிக்கலாம்.
அதிகளவில் மது அருந்துவது உங்களுக்கு மற்றொரு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. அது பின்வருபவன போன்ற பக்கவாத அபாயக் காரணிகளான பிற நோய் நிலைமைகளுக்குப் பங்களிக்கிறது:
• உயர் இரத்த அழுத்தம்
• நீரிழிவு நோய்
• உடல் பருமன்
• ஊற்றறை உதறல் (ஆட்ரியல் ஃபிப்ரில்லேஷன்)
• கல்லீரல் பாதிப்பு
மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்குச் சிரமமாக இருந்தால், உங்களுக்கு உதவக்கூடிய சில வளஆதாரங்கள் உள்ளன.
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் | ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alcoholics Anonymous) ஓர் ஆதரவுத் திட்டமாகும். ஆண்கள் மற்றும் பெண்கன், தங்கள் அனுபவத்தை, பலத்தை மற்றும் நம்பிக்கையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் திட்டம. தங்களின் பொதுவான பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய மற்றும் மதுப் பழக்கத்தில் இருந்து மீளுவதற்கு மற்றவர்களுக்கு உதவக்கூடிய திட்டம. |
வலைத்தளம்: http://www.singaporeaa.org தொடர்பு எண்: +65 81128089 மின்னஞ்சல்: help@singaporeaa.org | |
சிங்கப்பூர் அல்-அனான் குடும்பக் குழுக்கள் (Al-Anon Family Groups of Singapore) என்பவை, மதுவுக்கு அடிமையானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஓர் ஆதரவுத் திட்டமாகும். தங்களின் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதன் பொருட்டு தங்கள் அனுபவத்தை, பலத்தை மற்றும் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் திட்டம். மதுப்பழக்கம் என்பது ஒரு குடும்ப நோய், அதனால் மனப்போக்குமாற்றம் உங்களுக்கு உதவ முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். | |
வலைத்தளம்: https://www.alanonsingapore.org தொடர்பு எண்: +65 97742539 மின்னஞ்சல்: info@alanonsingapore.org | |
2008-இல் சுகாதார அமைச்சகம் (MOH) ஆதரவுடன், மனநல மருத்துவ நிலையத்தில் (IMH) நேஷனல் அடிக்ஷன்ஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் (The National Addictions Management Service, NAMS) தீயப் பழக்கங்களுக்கு அடிமையான மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக நிறுவப்பட்டது. NAMS-இல், போதைப் பொருட்கள், மது, சூதாட்டம், பந்தயம் மற்றும் பிறவற்றுக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் சிகிச்சையையும் ஆதரவையும் வழங்குகிறோம். | |
வலைத்தளம்: https://www.nams.sg தொடர்பு எண்: +65 67326837 முகவரி: Block 9 (Level 1), Buangkok Green Medical Park, 10 Buangkok View, Singapore 539747 | |
போதைப் பொருள், மது, சூதாட்டம், உடலுறவு, உண்ணல் சீர்க்கேடு (eating disorder), இணை யதளம் மற்றும் கடையில் திருடுதல் உள்ளிட்ட எல்லா வகையான தீயப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கும் வீ கேர் (WE CARE) ஆலோசனையையும் திட்டங்களையும் வழங்குகிறது. இது குணமடைந்து வரும் தனிநபர்களுக்கான, சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆலோசனை அழைப்பு நிலையமாகும். ஒரு பாதுகாப்பான சூழலை வழங்குவதன் மூலம், எமது வாடிக்கையாளர்களால் சுயமாக மீளுவதற்கு இயலுகிறது. | |
வலைத்தளம்: http://www.wecare.org.sg தொடர்பு எண்: +65 3165 8017 மின்னஞ்சல்: help@wecare.org.sg முகவரி: Kembangan-Chai Chee Community Hub, 11 Jalan Ubi, Block 5, #01-41, Singapore 409074 |
Article available in English, Chinese and Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
This article was last reviewed on Tuesday, December 31, 2024