பக்கவாதத்துக்குப் பின்னர் சமூக மற்றும் ஒய்வுநேர விஷயங்கள்: வாகனம் ஓட்டுவதற்கான தகுதி

Post-stroke management on going back to driving. 

பக்கவாதம் வந்த பிறகு உடல்ரீதியாகவும் அறிவாற்றல் ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களானது, சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உங்களின் திறனைத் தற்காலிகமாகவோ அல்லது ஒரு நீண்ட காலத்திற்கோ கட்டுப்படுத்தலாம். நீங்கள் மீண்டும் வாகனம் ஓட்டத் தொடங்குவதற்கு ஆர்வமாக இருக்கலாம்.

பக்கவாதம் வந்த பிறகு நான் வாகனம் ஓட்டலாமா?

நீங்கள் இது குறித்து உங்களின் மருத்துவ நிபுணர் (நரம்பியல் நிபுணர் / நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர்) மற்றும் பக்கவாதப் பராமரிப்புக் குழுவுடன் ஆலோசிப்பது நல்லது. (i) பக்கவாதம் உங்களுக்கு ஏற்பட்ட பிறகு நீங்கள் மருத்துவ ரீதியாக நிலையாக இருக்க வேண்டும். மற்றும் பக்கவாதம் மீண்டும் ஏற்படுவதற்குக் குறைந்த அபாயமும் பக்கவாதச் சிகிச்சைக்கு இணங்கி நடக்க வேண்டியதும் அவசியமாகும். (ii) உங்களின் வாகனம் ஓட்டும் திறன்களைப் பாதிக்கக்கூடிய எந்தப் புதிய குறைபாடுகளும் உங்களுக்கு இல்லை என்பதை நீங்கள் மதிப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

Driving_P1_PoliceDr.png

சிங்கப்பூர்க் காவல் துறையைப் (2023) பொறுத்தவரை, “சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் நீங்கள் சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுவதற்கு உங்களைத் தகுதியிழக்கச் செய்யக்கூடிய ஒரு நோய் நிலைமை அல்லது உடல்ரீதியான குறைபாடு உங்களுக்கு ஏற்கெனவே இருந்தால், ஏதேனும் ஒரு சிங்கபூர் பதிவுபெற்ற மருத்துவரிடம் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கான உங்கள் உடற்தகுதியை உறுதிசெய்யும் ஒரு சான்றிதழைப் பெறுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

மருத்துவர்கள் ஒவ்வொரு பக்கவாத நோயாளிக்கும் ஒரு தனிப்பட்ட மதிப்பீட்டையும் பரிந்துரையையும் செய்வார்கள். மருத்துவர் அவரது பக்கவாதப் பராமரிப்புக் குழுவுடன் ஆலோசனை செய்வார். மேலும், சிங்கப்பூர் மருத்துவச் சங்கத்தின் (SMA) வாகனம் ஓட்டுவதற்கான உடற்தகுதி (2011) குறித்த மருத்துவ வழிகாட்டுதல்களுக்கும் பரிந்துரைப்பார்கள்.  

பக்கவாதத்திற்கான SMA வழிகாட்டுதல்கள் குறித்த ஒரு சுருக்கமான தொகுப்புரை கீழே வழங்கப்பட்டுள்ளது: 

  1. வலிப்புத்தாக்கம், குறிப்பிடத்தக்க பார்வைப் புலக் குறைபாடுகள், இரட்டைப் பார்வை, மனநல அல்லது ஒருங்கிணைப்புக் குறைபாடு போன்ற உடற்குறையுள்ள நபர்கள், வாகனத்தின் கட்டுப்பாட்டுடன் குறுக்கிடுவதற்குப் போதுமான காரணம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டால், வாகனத்தை ஓட்டக் கூடாது.
Driving_P1_GreenBike.png

2. குழு 1 (வகை 1, 2 மற்றும் 3 உரிமங்கள்)

  • எந்தவித உடற்குறையும் எஞ்சியிருக்காத நபர்கள் 1 மாதத்திற்குப் பிறகு வாகனம் ஓட்டத் தொடங்கலாம்.
  • வாகனத்தைக் கட்டுப்படுத்தும் செயலுடன் குறுக்கிடாத மிதமான அளவுக்கு உடற்குறை எஞ்சியிருக்கும் நபர்கள், ஓட்டுநர் மதிப்பீட்டிலும் (சான்றளிக்கப்பட்ட ஓட்டுநர்-மதிப்பீடும் சிகிச்சையாளரால்), ஒரு நரம்பியல் நிபுணரால் இறுதி மதிப்பாய்வுரையிலும் தேர்ச்சியடைந்தால், அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படலாம்.

 

Driving_P1_Yellow Taxi.png

3. குழு 2 (வகை 4, 5 மற்றும் தொழில் வகை உரிமங்கள்)

  • பக்கவாதம் முழுமையாகக் குணமடைந்த 1 ஆண்டுக்குப் பிறகு இவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படலாம்.
  • இவர்கள் ஓட்டுநர் மதிப்பீட்டிலும் (சான்றளிக்கப்பட்ட ஓட்டுநர்-மதிப்பீடும் சிகிச்சையாளரால்), ஒரு நரம்பியல் நிபுணரால் இறுதி மதிப்பாய்வுரையிலும் கட்டாயம் தேர்ச்சியடைய வேண்டும்.
     

நிலையற்ற இரத்த ஓட்டப் பற்றாக்குறை பக்கவாதம் (TIA) தாக்குதலுக்குப் பிறகு நான் வாகனம் ஓட்டலாமா?

குழு 1 (வகை 1, 2 மற்றும் 3 உரிமம்)

  • நீங்கள் 1 மாதத்திற்கு TIA-இல் இருந்து விடுபட்ட பிறகே வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்.
  • நீங்கள் பல முறை TIA –வால் பாதிப்பு கொண்டிருந்தால், நீங்கள் மீண்டும் வாகனம் ஓட்டத் தொடங்குவதற்கு 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
     

குழு 2 (வகை 4, 5 மற்றும் தொழில் வகை உரிமம்)

  • நீங்கள் 6 மாதத்திற்கு TIA-இல் இருந்து விடுபட்ட பிறகே வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்.
  • நீங்கள் பல முறை TIA அல்லது மூளைத்தண்டு TIA -வால் பாதிப்பு கொண்டிருந்தால், நீங்கள் மீண்டும் வாகனம் ஓட்டுவதற்கு 1 ஆண்டுக்கு மேல் TIA -இல் இருந்து விடுபட்டிருக்க வேண்டும்.
     

எனது ஓட்டுநர் மதிப்பீட்டை நான் எங்கு செய்துகொள்ள வேண்டும்?

உங்கள் மருத்துவர் உங்களை ஒரு சான்றுபெற்ற ஓட்டுநர்-மதிப்பீட்டாளர் சிகிச்சையாளரிடம் பரிந்துரைப்பார். அவர் பின்வரும் மருத்துவமனைகளில் ஒன்றில் ஒரு விரிவான ஓட்டுநர் மதிப்பீட்டைச் செய்வார்:

 

Clinic for Advanced Rehabilitation Therapeutics (CART)

Hotline: +65 6889 4580

Address: Tan Tock Seng Hospital, Annex 2, Level 1, 7 Jalan Tan Tock Seng, Singapore 308440

Email: CART@ttsh.com.sg

Driving Assessment and Rehabilitation Service (DARS)

Department of Occupational Therapy (Jurong Health)

Hotline: +65 6716 2222

Address: Jurong Community Hospital, Tower C, Level 1 Outpatient Rehabilitation, 1 Jurong East Street 21, Singapore 609606

Website: https://www.jch.com.sg/Health-Information/Documents/brochures/Driving%20Assessment%20%20Rehab_OT.pdf

SGH Driving Evaluation and Rehabilitation Service (SGH DrivERS)

Occupational Therapy Department 

SingHealth Tower / Outram Community Hospital

Hotline: +65 6321 4377

Address: 10 Hospital Boulevard, Level 4, Singapore 308433

 

தேவைப்பட்டால், அந்தச் சான்றுபெற்ற சிகிச்சையாளர் உங்கள் வாகனத்தைச் சரியான முறையில் மாற்றியமைப்பதற்கு (உதாரணமாக., ஸ்பின்னர் நாப், இடது பாத ஆக்சிலேட்டர், கைக் கட்டுப்பாடுகள்) ஏற்பாடு செய்துதருவார். மற்றும் தகுதிபெற்ற வாகனம் ஓட்டுவதற்கான பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு (உடற்குறையுள்ளோருக்கான சமூகநலச் சங்கத்திலிருந்து அல்லது நிபுணத்துவம் பெற்ற தனிப்பட்ட வாகனம் ஓட்டுவதற்கான பயிற்றுவிப்பாளர்கள்) வாகனம் ஓட்டுவதற்கான சிறப்பு மறுசீரமைப்பு / மறுபயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துதருவார்.

பக்கவாதத்திற்குப் பிறகு மீண்டும் வாகனம் ஓட்டத் தொடங்குவதற்கான முழு மருத்துவ உடற்தகுதியைச் சான்றளிப்பதற்கு, வாகனம் ஓட்டுவதற்கான செயல்பாடு சார்ந்த உடற்தகுதி குறித்து DARP மற்றும் DARS வழங்கும் வாகனம் ஓட்டுவதற்கான எல்லா இறுதிவிளைவு அறிக்கைகளும், பரிந்துரைக்கின்ற மருத்துவரால் மேலொப்பமிடப்பட வேண்டியிருக்கும்.

 

Driving_P3_head.png

உடற்தகுதிச் சான்றளிப்பு இல்லாமல் வாகனம் ஓட்டலாமா?

சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதில் ஒவ்வொருவரும் பங்காற்றுகின்றனர். உடற்தகுதிச் சான்றளிப்பு இல்லாமல் வாகனம் ஓட்டுவது, உங்களுக்கும் மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் அபாயத்தை விளைவிக்கலாம்.

போக்குவரத்துக் காவல் (Traffic Police, TP) துறை அல்லது நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு எனது நிலை குறித்துத் தெரிவிக்கப்படுமா?

Driving_P3_TP.png

தற்சமயம், TP அல்லது LTA -க்கு மருத்துவர்கள் தகவல் தெரிவிப்பதற்கு எந்தச் சட்டப்பூர்வமான தேவையும் இல்லை. எனினும், உடற்தகுதியில்லாத நோயாளி ஒருவர் வாகனம் ஓட்டுவது நிச்சயமாகப் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தால், அது மருத்துவ இரகசியக்காப்பை மீறும் செயலாகாது என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தெரிவிக்கிறது. 

மருத்துவப் பரிந்துரைக்குப் பிறகு ஒருவர் DARP அல்லது DARS -இல் கலந்துகொள்ளாவிட்டால், அவரைப் பரிந்துரைக்கின்ற மருத்துவரால் மேலொப்பமிடப்படும் வாகனம் ஓட்டுவதற்கான இறுதி மருத்துவ உடற்தகுதிக்கு அவரது செயல்பாடு சார்ந்த வாகனம் ஓட்டுவதற்கான உடற்தகுதி தீர்மானிக்கப்படவில்லை என்று அர்த்தமாகும். அதே போன்று, அவர் கலந்துகொள்ளாதது குறித்து அவரைப் பரிந்துரைக்கின்ற மருத்துவர், TP மற்றும் LTA -க்கு DARP மற்றும் DARS -ஆல் பின்தொடர்வதற்காகத் தெரியப்படுத்தப்படும்.

நீங்கள் குறிப்பிட்ட வகையான மாற்றியமைக்கப்படாத வாகனம் அல்லது மாற்றிமைத்த வாகனம் உதாரணமாக, இடது பாத ஆக்சிலேட்டர் அல்லது ஸ்பின்னர் நாபைக் கொண்ட தானியங்கிக் கார் அல்லது தானியங்கிக் கார் மட்டும் ஓட்டுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டால், வாகனம் ஓட்டுவதற்கான இறுதி அறிக்கையை உங்கள் மருத்துவர் மேலொப்பமிட்டதற்குப் பிறகு TP-யிடம் தகவல் தெரிவிக்குமாறு நீங்கள் DARP அல்லது DARS-ஆல் அறிவுறுத்தப்படுவீர்கள். இது உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நிலைமையைப் புதுப்பிப்பதற்கு TP-ஐ இயலச் செய்யும்.

Driving_P3CarCrash.png

நீங்கள் பக்கவாதத்திற்குப் பிறகு வாகனம் ஓட்டுவதற்கு இன்னமும் சான்றளிக்கப்பட்டிருக்காத வேளையில் ஏதேனும் சாலை விபத்துகள் ஏற்பட்டால் என்ன நடக்கும்?

நீங்கள் மோட்டார் காப்புறுதிக் கோரல்களுடன் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம்.

 

Article available in English, Chinese and Malay.

For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.

Back to Top