பக்கவாதத்துக்குப் பின்னர் மறுசீரமைப்பு: தொழில்வழி சிகிச்சைமுறை

Post-stroke care management in occupational therapy

பக்கவாதம் ஏற்பட்டதற்குப் பிறகு, உங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். தொழில்வழிச் சிகிச்சையாளர்கள் நீங்கள் இழந்த திறன்களை மீண்டும் பெறுவதற்கு உதவியாகவும், பணிகளை பொருந்தச்செய்ய அறிவுறுத்தலாம். இதன்மூலம் உங்களுக்குரிய நடவடிக்கைகளில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடலாம்.

 

தொழில்வழி சிகிச்சைமுறை என்பது என்ன?

தொழில்வழி சிகிச்சைமுறை (Occupational Therapy, OT) என்பது ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில்முறையாகும். மக்களுக்குத் தேவையான அல்லது அவர்கள் மேற்கொள்ள விரும்பும் அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களை இயலச் செய்வதற்கு உதவும் சிகிச்சைமுறை. பிறகு சுய-பராமரிப்பு, வேலை அல்லது பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் மக்கள் பங்கேற்பதற்குத் தொழில்வழிச் சிகிச்சையாளர்கள் உதவுகின்றனர்.

 

தொழில்வழி சிகிச்சைமுறையால் எவ்வாறு உதவ முடியும்?

OT_P1_HandTherapy.png

உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய உதவுவதற்கு, தொழில்வழிச் சிகிச்சையாளர்கள் உங்கள் மறுவாழ்வுப் பயணத்தில் அன்றாட நடவடிக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். உங்கள் தொழில்வழிச் சிகிச்சையாளர்கள் உங்களின் திறன்களையும் பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றலையும் மீண்டும் பெற உங்களுடன் சேர்ந்து செயல்படுவார்கள். நீங்கள் காரியங்களை மேற்கொள்வதற்கான புதிய வழிகளைக் கண்டறிவதற்கு அவர்கள் உங்களுக்கு உதவலாம். மேலும் குளியலுக்கான குளியல் நாற்காலி அல்லது நடமாட உதவும் சக்கர நாற்காலி போன்ற அன்றாட நடவடிக்கைகளில் நீங்கள் பங்கேற்பதை எளிதாக்குகின்ற உதவி / மாற்றியமைக்கத்தக்க உபகரணங்களையும் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். 

வீட்டில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்கு, தொழில்வழிச் சிகிச்சையாளர்கள் உங்களின் இல்லத்தை மாற்றியமைத்தல் குறித்த ஆலோசனையையும், பராமரிப்பாளர் பயிற்சிகளையும் வழங்கலாம். சுய-பராமரிப்பைத் தவிர, கடைக்குச் செல்லுதல், உணவு சமைத்தல், பணத்தை நிர்வகித்தல் மற்றும் வேலை தொடர்பான விஷயங்கள் போன்ற அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான உங்கள் திறனையும் அவர்கள் மதிப்பிடுவார்கள்.

 

எனக்கு எங்கு இந்த சிகிச்சைமுறை அளிக்கப்படும்?

OT_P2_map_location.png

தீவிர கவனிப்பு மருத்துவமனையில், நீங்கள் மருத்துவரீதியாக நிலையாக இருக்கும் போது ஒரு தொழில்வழிச் சிகிச்சையாளர் உங்களைக் கவனிப்பார். அதைத் தொடர்ந்து, நீங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த மறுவாழ்வு நிலையத்தில் (மருத்துவமனையிலோ அல்லது சமூக மருத்துவமனையிலோ) மறுவாழ்வு பெறுவதைத் தொடரலாம். நீங்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இச்சிகிச்சையானது வெளிநோயாளியாக மருத்துவமனையிலோ, பகல்நேர மறுவாழ்வு நிலையங்களிலோ அல்லது வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைமுறைச் சேவைகளிலோ தொடரலாம். இவற்றில் எது உங்களுக்குப் பொருத்தமானது என்பதைக் கண்டறிவதற்கு, நீங்கள் உங்களின் மருத்துவர் மற்றும் சிகிச்சையாளர்களிடம் பேசுவது முக்கியமாகும்.

 

எனது பராமரிப்பாளர் அல்லது குடும்பம் எனக்கு எவ்வாறு உதவலாம்?

OT_P2_TherapyPatient.png

சாத்தியமென்றால், உங்களின் பராமரிப்பாளர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் மறுவாழ்வு அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு ஊக்குவிக்கிறோம். அவர்கள் உங்களுக்கான சமூக ஆதரவின் ஆதாரமாக இருக்கலாம். மேலும், நீங்கள் நோயிலிருந்து மீளுவதற்கான செயல்முறையின் போதும் உங்களுக்கு உதவலாம். உங்கள் பராமரிப்பாளர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்குத் தேவைப்படும் இடத்தில் பொருத்தமான உதவியை வழங்குவதற்கும் கூட உங்கள் தொழில்வழிச் சிகிச்சையாளர் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம்.

 

நோயிலிருந்து மீளுவதற்கான உதவிக்குறிப்புகள்

OT_P2_Notes.png
  • தொழில்வழிச் சிகிச்சையாளர் பரிந்துரைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். 
  • நீங்கள் அதிகமாகப் பயிற்சி செய்தால், விரைவாக நோயிலிருந்து மீளுவதற்கு வாய்ப்புள்ளது. 
  • அன்றாடப் பணிகளின் போது கூடுமான வரை உங்களின் பாதிக்கப்பட்ட பக்கத்தை ஈடுபடுத்துவதற்கும் நகர்த்துவதற்கும் முயற்சி செய்யுங்கள்.
  • பொறுமையைக் கடைப்பிடியுங்கள், உடனடி விளைவுகளுக்குப் பதிலாக நீண்டகால விளைவுகளுக்குக் குறிக்கோள் கொள்ளுங்கள்.
  • உடற்பயிற்சிகள் உங்களை முதலில் எளிதாகக் களைப்படையச் செய்யலாம். எனினும், உங்கள் உடற்திறனைப் படிப்படியாக அதிகரிப்பதற்கு அவை முக்கியமாகும்.
  • உங்கள் மேம்பாட்டைப் பதிவுசெய்வதற்கு ஒரு குறிப்பேட்டைப் பயன்படுத்தவும்.
  • சமூக ஆதாரவளங்கள் குறித்து கண்டறியுங்கள். உதாரணமாக, நீங்கள் சிங்கப்பூர் தேசிய ஸ்ட்ரோக் அசோசியேஷன் (SNSA) அல்லது ஸ்ட்ரோக் சப்போர்ட் ஸ்டேஷன் (S3) போன்ற பக்கவாத ஆதரவு அமைப்புகளில் நீங்கள் சேரலாம்

 

Article available in English, Chinese and Malay.

For more information on how to better manahttps://www.healthhub.sg/a-z/diseases-and-conditions/stroke-occupational-therapy-mlge your stroke recovery journey, visit Stroke E-Resources.

Back to Top