Post-stroke care management in spasticity
பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் தசை விறைப்புத்தன்மை உங்கள் உடலின் பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள தசைகளை விறைப்பாக மாற்றி, வலியை ஏற்படுத்தலாம். பக்கவாதத்திற்குப் பிறகு பிழைத்து வாழ்பவர்களில் மூன்று நபர்களுள் ஒருவர் விறைப்புத்தன்மையை அனுபவிக்கின்றார். தசை விறைப்புத்தன்மை மற்றும் அதற்கான சிகிச்சைகளைப் பற்றி இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
நமது மூளை, இயக்கங்களைக் கட்டுப்படுத்த தசைகளுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. பக்கவாதத்திற்குப் பிறகு மூளையில் ஏற்படும் சேதத்தினால் இந்த சமிக்ஞைகள் பாதிக்கப்படலாம். தசை விறைப்பிற்கு வழிவகுக்கும் இது, விறைப்புத்தன்மை என குறிப்பிடப்படுகிறது.
விறைப்புத்தன்மை, சிலருக்கு லேசானதாக தசைகளில் இறுக்கத்தை உணருவது போல இருக்கலாம். மேலும் சிலருக்கு இது கால்கள் மற்றும் கைகளில் வலியுடன் கூடிய கட்டுப்பாடற்ற பிடிப்புகளை உருவாக்கும் அளவுக்கு கடுமையானதாக இருக்கலாம். இது குறுக்கங்கள் எனப்படும் மூட்டுகள் அசையாமல் இருக்கும் நிலையையும் ஏற்படுத்தலாம்.
பக்கவாதத்திலிருந்து பிழைத்து வாழ்பவர்களுக்கு ஏற்படும் தசை விறைப்புத்தன்மையின் சில உதாரணங்களாக:
விறைப்புத்தன்மை எப்போதும் மோசமானது அல்ல. இது, உடல் இயக்கத்தின் போது பாதிக்கப்பட்ட மூட்டுக்கு ஆதரவை வழங்கவும் உதவக்கூடும். இருப்பினும், கடுமையான விறைப்புத்தன்மை செயல்பாட்டு இயக்கத்தை கட்டுப்படுத்தி, மூட்டுச் சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே, நடத்தல், குளித்தல், சாப்பிடுதல், ஆடை அணிதல் போன்ற அன்றாட நடவடிக்கைகள் சிரமமாகிவிடலாம்
விறைப்புத்தன்மை இவற்றை ஏற்படுத்தலாம்:
விறைப்புத்தன்மைக்கான சில உத்திகள் மற்றும் சிகிச்சைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பிசியோதெரபி மற்றும் தொழில்வழி சிகிச்சைமுறை
பாதிப்பின் தீவிரம் மற்றும் பகுதியைப் பொறுத்து, இயக்கத்தின் தரம் மற்றும் தசைகளின் கட்டுப்பாட்டை மேம்படுத்த, பொருத்தமான பயிற்சிகள் மற்றும் பிற உத்திகளை உங்கள் சிகிச்சையாளர் பரிந்துரைப்பார்.
கீழ்கண்டவை அவற்றுள் அடங்கும்:
உடற்பயிற்சிகள், நீட்சி மற்றும் இயக்கம் போன்றவை
| |
தொடர்ந்து துடிப்புடன் இருக்க அறிவுரை வழங்குதல்தசை விறைப்புதன்மையால் வழக்கமான இயக்கம் குறையக்கூடும். உடல் உழைப்பு குறைவதால் தசைகள் பலவீனமடைவதோடு குறுக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, முடிந்தவரை இயங்குவது முக்கியம். அதனால் ஒரு உடற்பயிற்சி குழுவில் சேரலாம் அல்லது உங்கள் குடும்பத்தினரிடமோ நண்பர்களிடமோ வேலைகளைச் செய்வதற்கும் மேலும் இயங்குவதற்கும் பயிற்சி செய்ய உதவச் சொல்லுங்கள். | |
அன்றாட நடவடிக்கைகளை மாற்றியமைத்தல்நடத்தல், குளித்தல், உடை அணிதல் மற்றும் உண்ணுதல் போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதற்கான புதிய வழிகளைக் கற்றல். | |
பொருத்தமான உதவிக் கருவிகள் மற்றும்/அல்லது உபகரணங்களைப் பயன்படுத்துதல்மூட்டு இயக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் , மூட்டு நிலைப்பாட்டை மேம்படுத்தவும் ஸ்ப்ளிண்ட்களும் (மூங்கில் சிம்புக்கட்டு) கெய்டர்களும் பயன்படுத்தப்படலாம். உணவு உண்பதற்கான கருவிகள், குளிப்பதற்கான நாற்காலிகள்/கழிப்பறை நாற்காலிகள், நடைப்பயிற்சி உதவிக் கருவிகள், சக்கர நாற்காலிகள் போன்ற பொருத்தமான உதவிக் கருவிகள் மற்றும் உபகரணங்கள், உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவும். நீங்கள் வலிமையைப் பெறும்போது சுதந்திரமாக நகரவும் இவை உதவும். | |
வீட்டில் மாற்றம் செய்தல்தசை விறைப்புத்தன்மையின் விளைவாக ஏற்படும் உடல் இயக்கக் கட்டுப்பாடுகளைச் சமாளிக்க, வீட்டுச் சூழலில் மாற்றங்களைச் செய்வது அவசியமாகலாம். பிடித்துக் கொள்வதற்கான கம்பிகள், சரிவுப்பாதைகள், உயர்த்தப்பட்ட கழிப்பறை இருக்கைகள் மற்றும் வழுக்காத கழிப்பறைத் தரைப் பதிகற்கள் ஆகியவை அதற்கான சில உதாரணங்களாகும். | |
செயல்பாடுசார் மின் தூண்டுதல் (FES)பாதிக்கப்பட்ட தசைகளை வலுப்படுத்தி பற்றுதல், அடைதல் மற்றும் நடத்தல் போன்ற செயல்பாடுகளை மீண்டும் கற்க FESஐப் பயன்படுத்தலாம் சிகிச்சையாளரின் மதிப்பீட்டிற்குப் பிறகு, உங்களுக்கு உகந்ததாக இருக்கும் பட்சத்தில் இது பரிந்துரைக்கப்படலாம். |
சில சந்தர்ப்பங்களில், உங்கள் மருத்துவர் இந்த வழிகளில் ஒன்றின் மூலம் மருந்துகளை பரிந்துரைக்கலாம்:
வாய்வழிபேக்லோஃபென் போன்ற விறைப்புத்தன்மையை நீக்கும் வாய்வழி மருந்துகள் உள்ளன. | ஊசிமருந்துபோடாக்ஸ் சிகிச்சை, தசை விறைப்புத்தன்மையால் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் இலக்காகக் கொண்டு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. போட்டுலினம் டாக்ஸின் பாதிக்கப்பட்ட தசையில் நேரடியாக செலுத்தப்படுவதால், இது அந்தக் குறிப்பிட்ட தசையின் விறைப்பைக் குறைக்கிறது. இது நிலைப்பாட்டையும், செயல்பாட்டையும் மேம்படுத்தலாம். விளைவுகள் தெரிய வழக்கமாக 7 முதல் 8 நாட்கள் வரை ஆகுவதோடு இந்த விளைவுகள் 3 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும். அதிகபட்ச செயல்பாட்டு மேம்பாட்டிற்கு, போடாக்ஸ் சிகிச்சையை பிசியோதெரபி மற்றும் தொழில்வழி சிகிச்சையுடன் இணைத்து அளிப்பது அவசியம். |
அன்றாட வாழ்க்கையில் உடலியக்கங்களில் சிரமத்தை ஏற்படுத்தும் விறைப்புத்தன்மைக்குச் சிகிச்சையளிக்க அறுவைச்சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், அறுவைச்சிகிச்சை என்பது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. அறுவைச்சிகிச்சையின் நன்மைகள் எப்போதும் அதன் அபாயங்களுடன் கவனமாகப் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவருக்குச் சிறந்த விளைவுகளைப் பெற, உங்களைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவர் மற்றும் மருத்துவருடன் தொடர்புடைய ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறவும்.
Article available in English, Chinese, and Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
This article was last reviewed on Tuesday, September 24, 2024