Stroke rehabilitation in speech therapy for communication difficulties
பக்கவாதத்திற்குப் பிறகு தொடர்பில் சிரமங்கள் ஏற்படுவது மிகவும் பொதுவானது. பக்கவாதம் உங்கள் தகவல்தொடர்புத் திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், நீங்கள் நலமடைவதற்கு பேச்சு சிகிச்சை எவ்வாறு உதவும் என்பதையும், இந்த உண்மைத் தாள் விளக்குகிறது.
மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் நமது பேச்சையும் தொடர்புத் திறனையும் கட்டுப்படுத்தும். மூளையின் இந்தப் பகுதிகள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால், இவை சிரமமாகிவிடும்:
இந்தச் சவால்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வெளிப்படுத்த/சொல்ல விரும்புவதை மற்றவர்கள் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகலாம்.
பாதிக்கப்பட்ட மூளையின் பகுதிகளைப் பொறுத்து, உங்களுக்கு தொடர்பு கொள்வதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிக்கல்கள்/ சிரமங்கள் இருக்கலாம். பொதுவான சிரமங்கள் பின்வருமாறு:
இது மிகவும் பொதுவான பிரச்சினை. நாக்குழறல் என்பது பேச்சு உருவாவதில் சிரமம், இது தசை பலவீனம் அல்லது ஒருங்கிணைப்பு பிரச்சினையால் ஏற்படுகிறது. உங்கள் பேச்சு தெளிவாக இல்லாமல் இருக்கலாம், இதனால் மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள்.
பேச்சிழப்பு (அஃபேசியா) என்பது மொழியின் குறைபாடு, இது பேசும் மொழி உருவாவதை அல்லது புரிந்துக் கொள்வதை மற்றும் படிக்கும் அல்லது எழுதும் திறனை பாதிக்கிறது. சொல்ல சரியான சொற்களைக் கண்டுபிடித்தல், வாக்கியங்களை உருவாக்குதல், நீங்கள் என்ன கேட்கிறீர்கள் அல்லது படிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய சிரமங்களை எதிர்ப்பார்க்கலாம்.
இந்த பேச்சுக் கோளாறு பேச்சுக்கு பயன்படுத்தப்படும் தசை இயக்கங்களின் திட்டமிடலைப் பாதிக்கிறது (உதாரணமாக. நாக்கு, உதடுகள், தாடை). பேச்சு தசைகளால் தேவையான நேரத்திற்குள் சரியானத் தொடரில் அசைய முடியாமல் பேசும்போது ஒலிகள், அசைகள் மற்றும் சொற்களில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
டிஸ்ஃபோனியா என்பது தெளிவான குரலை உருவாக்குவதில்ஏற்படும் சிரமம். டிஸ்ஃபோனியா கொண்ட நபர்களுக்கு ஒரு கஷ்டமான, காற்றை போன்ற அல்லது கரகரப்பான குரல் இருக்கலாம். சிலர் தங்கள் குரல் சுருதி மற்றும் உரக்கத்தை கட்டுப்படுத்துவதில்சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.
பேச்சுச் சிகிச்சைமுறையில் தொடர்பில் உள்ள சிரமங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவை அடங்கும்.
உங்கள் தேவைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு ஏற்ப சிறப்புச் சிகிச்சையை அளிக்க பேச்சுச் சிகிச்சையாளர் உங்களை மதிப்பீடு செய்து, உங்களுடன் இணைந்து செயல்படுவார்.
பேச்சுச் சிகிச்சைமுறை தொடர்புத் திறனை மேம்படுத்தவும், சிறப்பாக உரையாடுவதை எளிதாக்கவும் உதவும்:
தொடர்பில் சிரமங்கள் இருப்பதை உங்கள் மருத்துவக் குழு கவனித்தால், நீங்கள் தீவிர நோய்க்கான மருத்துவமனை அல்லது சமூக மருத்துவமனையில் உள்ள பேச்சுச் சிகிச்சையாளருக்கு பரிந்துரைக்கப்படலாம்.
நீங்கள் மருத்துவமனையில் விடுவிக்கப்பட்ட பிறகு, இந்தச் சிகிச்சை வெளிநோயாளி மருந்தகங்கள், சமூகம், அல்லது வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைமுறைச் சேவைகள் ஆகியவற்றில் தொடரலாம். உங்களுக்கு மிகவும் பொருத்தமான விருப்பத்தேர்வு எது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் உங்களின் பேச்சுச் சிகிச்சையாளருடன் கலந்துரையாட வேண்டும்
எந்தவொரு தொடர்புப் பிரச்சினைகளிலிருந்தும் நலமடைவது நபருக்கு நபர் மாறுபடலாம். மேலும் இதற்கு பெரும்பாலும் சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகும்.
மறுவாழ்வுச் செயல்முறைக்கு நீங்கள் முனைப்புடன் பங்கேற்பது முக்கியமானது. வழக்கமான பயிற்சி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுமூலம், உங்கள் தொடர்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளை உருவாக்க பேச்சு சிகிச்சையாளர் உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
| சிங்கப்பூர் தேசிய பக்கவாதச் சங்கம் (SNSA) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பக்கவாத மன்றங்களை ஏற்பாடு செய்கிறது. பக்கவாத மன்றங்கள் என்பது பக்கவாதத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் தொடர்புடைய விழுங்க இயலாமை போன்ற தலைப்புகளில் பேச அழைக்கப்பட்ட பேச்சாளர்களைச் சந்திக்கவும், ஆதரவு பெறவும், கற்றுக்கொள்ளவும் உதவும் ஒரு தளமாகும். |
வலைத்தளம்: http://www.snsasg.org/ மின்னஞ்சல்: contact@snsa.org.sg நேரடித் தொலைபேசி எண்: +65 8125 1446 | |
அபாசியா மூங்கையம் எஸ்ஜி (Aphasia SG) என்பது லாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும், இது பேச்சிழப்பு ஏற்பட்டவர்களையும், அவர்களின் பராமரிப்பாளர்களை ஆதரிக்கிறது. அபாசியா மூங்கையம் எஸ்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.ஆதரவுடன் கூடைய உரையாடல்கள், சமூக இருவழித் தொடர்பு மற்றும் பேச்சிழப்புக்கு ஏற்ற சூழ்நிலைகளில் பாடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. | |
வலைத்தளம்: www.aphasia.sg |
Article available in English, Chinese, and Malay
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
This article was last reviewed on Tuesday, September 24, 2024