Post-stroke tips on returning to work
பக்கவாதத்தால் பிழைத்து வாழ்பவர்களில் சுமார் 30 சதவீதம் பேர், 60 வயதிற்குட்பட்டவர்கள். " என்னால் வேலைக்குத் திரும்ப முடியுமா?", இது அவர்கள் எழுப்பும் பொதுவான கேள்வி. இந்தச் சவாலான கேள்விக்கு பதிலளிக்க, பக்கவாதத்தின் விளைவுகள், அது வேலை செய்யும் திறனை எவ்வாறு பாதிக்கிறது, மற்றும் வேலைக்குத்திரும்புவதில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வேலைக்குத் திரும்புவற்கு முன் உங்கள் உடல்நிலை மீட்சியடையவும் நலம்பெறவும் போதுமான ஓய்வு மிக அவசியம். இந்த மாற்றத்திற்கு உதவ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சில உதவிக்குறிப்புகளும் வளஆதாரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:
உங்கள் செயல் திறன், சிந்தனைத்திறன் மற்றும் தகவல் பரிமாற்றத்திறன்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நீங்கள் வேலை செய்வதை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில வேலைகளைச் செய்வதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம்.
அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டிய தேவை இருப்பதால் முழுநேர வேலைக்குத் திரும்புவது சிரமமாகலாம். நீங்கள் முந்தைய ஆற்றல் மற்றும் செயல்பாடு தாங்குதிறனை மீண்டும் பெற சிறிது நேரம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சில வேலைகள் நீங்கள் நினைப்பதை விட எளிதானதாகவோ அல்லது கடினமாகவோ இருக்கக்க்கூடும். உங்கள் மருத்துவர் மற்றும் சுகாதார குழுவுடன் பணிக்குத் திரும்புவதற்கான உங்கள் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடவும்.
உங்கள் தற்போதைய திறனைக் கொண்டு, நீங்கள் செய்த முந்தைய வேலையைச் செய்ய இயலலாம் அல்லது இயலாமலும் போகலாம். குறுகிய வேலை நேரம் அல்லது செய்யும் வேலையில் மாற்றம் போன்ற மாற்று வேலை ஏற்பாடுகள் உள்ளனவா, என்று நீங்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் கலந்துரையாடுங்கள்.
வேலைக்குத் திரும்பிச் செல்வதற்கான உங்கள் திட்டத்தைப் பற்றி உங்கள் தொழில்வழி சிகிச்சையாளரிடம் பேசுங்கள், அவர் உங்கள் பலங்கள், பலவீனங்கள் மற்றும்செயல்பாட்டுத் திறனை ஆய்வு செய்ய உதவுவதோடு அவற்றை வேலையின் தேவைகளுடன் பொருத்தவும் உதவுவார்.
வேலைக்குத் திரும்பி செல்வது ஒருவர் மீண்டெழ உதவக்கூடும். இது உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடும்.
நீங்கள் வேலைக்குத் திரும்பிச் செல்வதற்கான திட்டத்தை உருவாக்க உங்கள் மருத்துவர், ஆரோக்கியப் பராமரிப்பு வல்லுநர்கள் மற்றும் பணிபுரியும் நிறுவனத்துடன் கலந்துரையாடுங்கள். பின் வரும் சில நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம்:
வேலைக்குத் திரும்பிச் செல்வதற்கான உங்கள் உடல்நிலை மற்றும் உடற்தகுதியை தெரிந்து கொள்ள, உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
வேலைக்குத் திரும்பிச் செல்வதை எளிதாக்க தொழில்வழிச் சிகிச்சையாளரின் பின் வரும் சேவைகள் உங்களுக்கு உதவலாம்:
குறைக்கப்பட்ட/மாற்றிக்கொள்ளக்கூடிய வேலை நேரங்கள், இலேசான வேலைகள், அல்லது உடல்நிலைக்கு ஏற்ப வேலையிட வசதிகள், படிப்படியாக வேலைக்குத் திரும்புவது போன்ற வேலையிட வசதிகளைப் பற்றி உங்கள் முதலாளியுடன் பேசுங்கள் . உங்கள் பணி செயல்திறனின் எதிர்பார்ப்பை சிறப்பாக நிர்வகிக்க வேலை இலக்குகள் மற்றும் குறிக்கோள்களைப் பற்றி விவாதித்து மறு மதிப்பீடு செய்யுங்கள்.
மாற்றங்களைச் செய்ய மற்றும் மாற்றங்களை ஏற்க உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் கலந்துரையாட வேண்டியிருக்கலாம். குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த பயணத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பது உங்கள் நல்வாழ்வுக்கு முக்கியம். நிதி பிரச்சினைகளுக்கு சமூக ஆதரவைப் பெறுவதையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
பிஸ்லிங்க் நிலையம் என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது பின்தங்கிய நபர்களுக்கு, குறிப்பாக உடற்குறை உள்ளவர்களுக்கு, சிங்கப்பூரில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தருவதன் மூலம் சேவை அளிக்கிறது. பிஸ்லிங்கின் திட்டங்கள் பலவிதமான மென்திறன்களையும், வேலைவாய்ப்புப் பயிற்சியையும் வழங்குகின்றன, அவை பங்கேற்பாளர்கள் அவர்களின் முழு திறனை அடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. | ||
இணையத்தளம்: www.bizlink.org.sg | ||
குடும்பச் சேவை நிலையங்கள்:
| குடும்பச் சேவை நிலையங்கள் (FSCகள்) சமூகத்தில் அமைந்துள்ளன, இவை தேவைப்படும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவி மற்றும் ஆதரவை வழங்குகின்றன. இதில் சமூக சேவை நிபுணர்கள் பணிபுரிகின்றனர். FSCகள் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள HDB நகரங்களில் அமைந்துள்ளன, உங்களுக்கு அருகிலுள்ள FSCஐக் கண்டுபிடிக்க கீழேயுள்ள இணையத்தளத்தைப் பார்வையிடலாம். | |
இணையத்தளம்: https://www.msf.gov.sg/docs/default-source/default-document-library/list-of-fscs-in-operation.pdf | ||
| எஸ்.ஜி. எனேபல் (இயலாமை உள்ளோருக்கான நல்வாழ்வு நிலையம்) என்பது உடற்குறை உள்ளவர்களுக்கு உதவும் பிரத்யேக முகமையாகும். எஸ்.ஜி. எனேபலின் சில முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:
* For Singapore Citizens and Permanent Residents only. * சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு மட்டும். | |
இணையத்தளம்: https://www.sgenable.sg/ நேரடித் தொலைபேசி எண்: 1800 8585 885 | ||
SPD என்பது அனைத்து வயது உடற்குறை உள்ளவர்களுக்கும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கவும், அவர்களை பிரதான சமூகத்தில் ஒருங்கிணைக்கவும் உதவ அமைக்கப்பட்டிருக்கும் ஓர் உள்ளூர் தொண்டு அமைப்பாகும். தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக சேவை ஆதரவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம், உடல், உணர்ச்சி மற்றும் கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு SPD சேவை செய்கிறது. | ||
இணையத்தளம்: http://www.spd.org.sg/ | ||
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்திற்கானமுத்தரப்பு கூட்டணி | சிங்கப்பூரில் WSH தரத்தை உயர்த்துவதற்கான உத்திகளை உருவாக்க வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார (WSH) மன்றம் மனிதவள அமைச்சு மற்றும் பிற அரசு முகமைகள், முத்தரப்பு கூட்டாளிகள், துறை மற்றும் தொழில்முறைச் சங்கங்களுடன் நெருக்கமாக செயல்படுகிறது. அதன் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று, பணியில் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகும். வேலைக்குத் திரும்பிச் செல்லுதல் (RTW) திட்டம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பணி திறன் மற்றும் நீண்டகால வேலைவாய்ப்பை மீண்டும் பெற உதவுவதற்கும், வேலையிடத்தில் பொருளாதார உற்பத்தித்திறனுக்கு அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பகால. நிலையிலேயே தொடங்கும் ஒரமுயற்சியாகும். மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்ட RTW ஒருங்கிணைப்பாளர் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான முக்கிய தொடர்பு நபராவார். மேலும் தகவல்கள், பங்கேற்கும் மருத்துவமனைகள் மற்றும் தொடர்பு எண்களை. பெற இணையத்தளத்தைப அல்லது கையேடுகளைப் பார்க்கவும். | |
இணையத்தளம்: https://www.tal.sg/wshc | ||
வரம்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட திறன்கள் (ABLE) என்பது ஒரு சமூக சேவை நிறுவனம் ஆகும், இது உடல் ஊனமுற்றோர் கௌரவத்துடன், ஆக்கப்பூர்வமான, சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவுகிறது. | ||
வலைத்தளம்: www.able-sg.org மின்னஞ்சல்: enquires@able-sg.org |
Article available in English, Chinese and Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
This article was last reviewed on Tuesday, December 31, 2024