பக்கவாதத்துக்குப் பின்னர் மறுசீரமமப்பு: முழுங்குவதில் சிரமங்கள்

Stroke rehabilitation on swallowing difficulties

Swallowing_P1_Choking.png

முழுங்குவதில் சிரமம் ஏற்படுவது பக்கவாதத்தின் பொதுவான விளைவு. பக்கவாதம் உள்ளவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் முழுங்குவதில் சிரமங்களை அனுபவிப்பார்கள். பக்கவாதம் முழுங்குவதை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், உங்களுக்கு உதவக்கூடிய சிகிச்சைகள் என்னென்ன என்பதையும் இந்த உண்மைத் தாள் விளக்குகிறது.

நான் முழுங்குவதை பக்கவாதம் எவ்வாறு பாதிக்கிறது?

முழுங்குவது ஒரு சிக்கலான வேலையாகும்; இதற்கு உங்கள் வாய் மற்றும் தொண்டையில் உள்ள வெவ்வேறு தசைகளை உங்கள் மூளை ஒருங்கிணைக்க வேண்டும். பக்கவாதம் உங்கள் வாயைச் சுற்றி உணவை நகர்த்தும் விதத்தையும், முழுங்குவதையும் பாதிக்கும். இது முழுங்க இயலாமை (டிஸ்ஃபேஜியா) என்று அழைக்கப்படுகிறது.

முழுங்க இயலாமைமையின் சிக்கல்கள் என்ன?

Swallowing_P1_NormalSwallowing.png
சாதாரணமாக முழுங்கும்போது, உணவு உணவுக் குழாயிலும் வயிற்றிலும் நுழைகிறது.
Swallowing_P1_abnormalSwallowing.png

உங்களால் பாதுகாப்பாக முழுங்க முடியாவிட்டால், உணவு மற்றும் பானங்கள் உங்கள் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலுக்குள் நுழையக்கூடும். இது உறிஞ்சியிழுத்தல் (ஆஸ்பிரேஷன்) என்றழைக்கப்படுகிறது. இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை உறிஞ்சியிழுத்தலின் சில அறிகுறிகளாகும்.

இருப்பினும், சிலருக்கு உறிஞ்சியிழுத்தல் எந்த அறிகுறி அல்லது அடையாளம் இல்லாமல் இருக்கலாம். . இது அமைதியான உறிஞ்சியிழுத்தல் என்று அழைக்கப்படுகிறது. உறிஞ்சியிழுத்தல் மற்றும் அமைதியான உறிஞ்சியிழுத்தல் இரண்டும் நுரையீரல் தொற்றுக்கு வழிவகுக்கும், இது மிகவும் ஆபத்தானதாக மாறலாம். மேலும், முழுங்க இயலாமை உள்ளவர்களுக்கு நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஆகையால், ஒரு தகுதி பெற்ற பேச்சு சிகிச்சையாளர் உங்கள் முழுங்கும் செயல்பாட்டை மதிப்பீடுவது முக்கியம், குறிப்பாக உணவு உண்ணும்போது மற்றும் குடிக்கும்போது அல்லது அதற்குப் பிறகு இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்:

  • இருமல்
  • தொண்டையைச் சரிசெய்தல்
  • அடைத்தல்
  • உங்கள் தொண்டையில் உணவு அல்லது தண்ணீர் அடைத்துக் கொள்ளும் உணர்வு
  • ஈரமான குரல்
  • சுவாசிப்பதில் சிரமம்

என்ன சிகிச்சை கிடைக்கிறது?

உங்களுக்கு முழுங்க இயலாமை இருந்தால், நீங்கள் ஒரு பேச்சு சிகிச்சையாளரிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும். சில நேரங்களில், நீங்கள் ஒரு உணவியல் நிபுணரிடம் பரிந்துரைக்கப்படலாம். முழுங்க இயலாமை மற்றும் அதன் விளைவுகளை நிர்வகிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உள்ளது.

பேச்சுச் சிகிச்சையாளர்

ஒரு பேச்சுச் சிகிச்சையாளர் உங்கள் முழுங்கும் செயல்பாட்டை மதிப்பீட்டுபொருத்தமான இடத்தில் பின்வரும் சிகிச்சை உத்திகளைப் பற்றி உங்களுக்கு அறிவுறுத்துவார்:

Swallowing_P2_STassistSwallowing.png

முழுங்குதல் மறுவாழ்வு உடற்பயிற்சிகள்

இந்த உடற்பயிற்சிகள் உங்கள் முழுங்கும் செயல்பாட்டை மேம்படுத்தவும், சிக்கல்களைக் குறைக்கவும் அல்லது தடுக்கவும் பாதிக்கப்பட்ட தசைகளுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகின்றன.

Swallowing_P2_thickener.png

மாற்றியமைக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் நிலைத்தன்மை

முழுங்குவதை எளிதாகவும் பாதுகாப்பாகவும் செய்ய, உங்கள் உணவு மற்றும் பானங்களில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் பானங்களை கெட்டியாக்க வேண்டியிருக்கும் அல்லது உணவு தயாரிப்பில்மாற்றங்கள் தேவைப்படும் . உங்கள் உணவை நறுக்கி, பிசைந்து அல்லது மசிந்து உணவின் அமைப்பை மாற்ற வேண்டியிருக்கும்.

Swallowing_P3_PEG.png
பெர்குடேனியஸ் எண்டோஸ்கோபிக் காஸ்ட்ரோஸ்டமி (பி.இ.ஜி.)
Swallowing_P3_NGT.png
நேசோகாஸ்ட்ரிக் குழாய் (என்.ஜி.டி.)

குடல்வழி (குழாய்) உணவளித்தல்

முழுங்குவது உங்களுக்கு பாதுகாப்பற்றதாக இருந்தால், உங்களுக்கு வேறு உணவு முறைகள் தேவைப்படலாம். நீரேற்றம், ஊட்டச்சத்து மற்றும் மருந்துகளை உங்கள் வயிற்றிற்கு நேரடியாக பாதுகாப்பாக வழங்குவதற்கான வழிமுறையாக குடல்வழி உணவளித்தல், அல்லது உணவுக் குழாயின் பயன்பாடு உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

நேசோகாஸ்ட்ரிக் குழாய் (என்.ஜி.டி.) அல்லது பெர்குடேனியஸ் எண்டோஸ்கோபிக் காஸ்ட்ரோஸ்டமி (பி.இ.ஜி.) குழாய் பயன்படுத்துவது போன்றவை குடல்வழி உணவளித்தலின் எடுத்துக்காட்டுகளில் அடங்கும். உங்களுக்கு மிகவும் பொருத்தமானது எது என்பதை அடையாளம் காண உங்கள் மருத்துவர் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் இந்த விருப்பத்தேர்வுகளை உங்களுடன் விவாதிப்பார்.

உணவியல் நிபுணர்

முழுங்க இயலாமை நிலை சாப்பிடுவதையும், குடிப்பதையும் சிரமமாக்கலாம் என்பதால், இது நீரிழப்பு, எடைக்குறைவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம். நீங்கள் போதுமான ஊட்டச்சத்து பெறுகிறீர்கள் என்பதை ஒரு உணவியல் நிபுணர் உறுதிப்படுத்த முடியும்.

ஒரு உணவியல் நிபுணர் உங்களுக்கு இவை குறித்து ஆலோசனை வழங்கலாம்:

Swallowing_P3_Dietitian.png
  • பேச்சுச் சிகிச்சையாளரால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதற்கான நுட்பங்களும் வழிமுறைகளும்
  • உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கான மாற்று வழிகள்
  • குடல்வழி உணவளிக்கப்படுபவருக்கான உணவுத் திட்டம் அல்லது உணவளித்தல் முறையை உருவாக்குதல்

நான் எவ்வாறு நலமடைவது?

Swallowing_P3_FamilyFeast.png

பக்கவாதம் ஏற்பட்ட முதல் சில வாரங்களுக்குள் முழுங்க இயலாமை மேம்படக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இருப்பினும், பக்கவாதத்தின் தீவிரம் மற்றும் வகையைப் பொறுத்து, பக்கவாத்த்திலிருந்து பிழைத்தவர்களில் ஓரு சிரிய பகுதியினர் நீண்டகால்சிரமங்களை அனுபவிப்பார்கள்.

மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு இன்னும் முழுங்க இயலாமையை அனுபவித்தால், உங்கள் பேச்சு சிகிச்சையாளரைத் தொடர்ந்து பின்தொடரவும். பேச்சு சிகிச்சையாளர் உங்களுடனும் உங்கள் பராமரிப்பாளர்களுடனும் இணைந்து உங்கள் மறுவாழ்வுக்கான ஒரு வீட்டுத் திட்டத்தைத் திட்டமிடுவார், மேலும் நீங்கள் வீட்டில் பாதுகாப்பான முறையில் உண்பதையும், குடிப்பதையும் உறுதிசெய்வார்.

நீங்கள் உணவுக் குழாயுடன் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்றால், உங்களுக்கு அல்லது உங்கள் பராமரிப்பாளருக்கு வீட்டிலேயே குழாய் மூலம் உணவளித்தலை நிர்வகிக்க பயிற்சி அளிக்கப்படும். தேவைப்பட்டால், உணவளிக்கும் குழாயைப் பராமரிப்பதில் உங்களுக்கு உதவக்கூடிய சமூக சேவை அமைப்புகளு உள்ளன.

சில பயனுள்ள குறிப்புகள்

  • உங்கள் பேச்சுச் சிகிச்சையாளரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்
  • சாப்பிடும்போதும், ​​குடிக்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாகஎடுத்துக் கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு வாயையும் மெதுவாகவும் கவனமாகவும் மென்று முழுங்கவும்
  • உணவு நேரங்களிலும், உணவுக்குப் பிறகு குறைந்தது 30 நிமிடங்களும் நேராக உட்காரவும்
  • மற்றொரு கடி கடிக்கும் முன் உங்கள் வாயில் உள்ள எல்லா உணவுகளையும் முழுங்கவும்
  • நீங்கள் சாப்பிடும்போது கவனம் செலுத்துங்கள். சுற்றியிருக்கும் கவனச்சிதறல்களை நீக்குங்கள் அதாவதுஉணவு நேரத்தில் தொலை காட்சியை அணைக்கவும்.
  • மூன்று நிலையான உணவுவேளைகள் உங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தால் நாள் முழுவதும் சிறிய அளவுகளைஅடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
  • நல்ல வாய் சுகாதாரத்தை நிர்வகியுங்கள்: தினமும் மூன்று முறை பல் துலக்குங்கள். நீங்கள் செயற்கைப்பற்களை அணிந்திருந்தால், ஒவ்வொரு உணவுவேளைக்குப் பிறகும் அவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்யவும்.

Article available in English, Chinese and Malay.

For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.

Back to Top