பக்கவாதத்துக்குப் பின்னர் சமூக மற்றும் ஒய்வுநேர விஷயங்கள்: விமானப் பயணத்திற்கான தகுதி

 
Travelling_P1_intro.png

 

பக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும். உடல் மற்றும் ஆரோக்கிய மாற்றங்கள், வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாகும். நீங்கள் சுற்றுலா அல்லது தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்குத் திட்டமிடுகிறீர்கள் எனில், உங்கள் பயணத் திட்டங்களில் உங்களுக்கு உதவக்கூடிய தகவல்களை இந்த விவரத்தாள் வழங்குகிறது.

 

பக்கவாதம் ஏற்பட்ட பிறகு நான் வெளிநாடு செல்ல முடியுமா?

 
Travelling_P1_DrConsult.png

 

பக்கவாதம் ஏற்பட்ட பிறகு உள்ள சில வாரங்களில் உங்களுக்கு மீண்டும் ஒரு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. பக்கவாதத்திற்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக நீங்கள் மருத்துவப் பின்தொடர் ஆய்வுகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமிருக்கலாம்.

உங்களுக்கு ஏற்பட்ட பக்கவாதம் உங்களின் நடமாட்டத் திறனைப் பாதித்திருக்கலாம். உடல் செயல்பாட்டை மீட்பதற்கு, நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மறுவாழ்வுச் சிகிச்சைமுறையில் கலந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கலாம்.

நீங்கள்வெளிநாடு செல்வது குறித்து எண்ணம் கொண்டிருந்தால், தனிப்பட்ட மருத்துவ ஆலோசனையும் பக்கவாதத்திற்குப் பிறகு பயணம் செய்வதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்தும் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது சிறந்ததாகும்.

 

விமானப் பயணமும் பக்கவாதமும்

 
Travelling_P1_plane.png

 

பக்கவாதம் ஏற்பட்ட பிறகு விமானம் பயணம் மேற்கொள்வதற்குச் சில மருத்துவப் பரிசீலனைகள் இருக்கலாம். நோய் நிலைமைகளுடன் விமானப் பயணம் செய்வது தொடர்பான தனிப்பட்ட விதிகளை ஒவ்வொரு விமானச்சேவை நிறுவனமும் வகுத்துள்ளன. உங்கள் பயணத்தை நீங்கள் திட்டமிடுவதற்கு முன்னர், உங்கள் மருத்துவருடனும் விமானச்சேவை நிறுவனத்துடனும் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 
Travelling_P1_DrCertify.png

 

நீங்கள் மருத்துவர் சான்றிதழ் ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு அல்லது விமானச்சேவை நிறுவனத்தின் மருத்துவத் தடைநீக்க மதிப்பீட்டுப் படிவத்தை நிறைவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படலாம். இதில் சிறப்பு மருத்துவ உதவிக்கான வேண்டுகோள்கள் அல்லது விமானத்தினுள் மருத்துவச் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான வேண்டுகொள்கள் உள்ளடங்கலாம்.

 

வெளிநாட்டிற்குப் பயணம் செய்வது தொடர்பான உதவிக்குறிப்புகள்

விமானப் பயணத்தின் போது உடற்குறை உள்ளவர்களுக்கான உதவி

 
Travelling_P2_pushWheelchair.png
  • உங்களுக்குச் சிறப்பு இருக்கை ஏற்பாடுகள் தேவையென்றால் அல்லது நீங்கள் விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் உங்களுக்குச் சக்கர நாற்காலி தேவைப்படுவது போன்ற உதவி தேவைப்படுகிறது என்றால், உங்கள் விமானம் புறப்படுவதற்குக் குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்னதாக உங்கள் விமானச்சேவை நிறுவனத்தின் அலுவலகத்தை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
  • உணவு உண்ணுதல், கழிவறைக்குச் செல்லுதல், அவசரகாலத்தில் வெளியேறும் வழிகளை நோக்குச் செல்லுதல் ஆகியவற்றில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது பாதுகாப்பு தொடர்பான சுருக்கவுரைகளைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தால், உங்களுக்குத் துணையாக ஒருவர் உங்களுடன் பயணம் செய்வதற்கு நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
  • உடற்குறைகளுடன் உள்ள எல்லா பயணிகளும் சிரமமின்றி பயணம் செய்வதை உறுதிசெய்வதற்கு, விமானம் புறப்படுவதற்குக் குறைந்தபட்சம் 2 முதல் 3 மணிநேரத்திற்கு முன்னதாக நுழைவுச் சோதனையைச் செய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

 

மருந்துகளுடன் பயணம் செய்தல்

 
Travelling_P2_MedsBottle.png

 

  • வெளிநாட்டிற்குப் பயணம் செய்யும் போது உங்களுடன் போதுமான மருந்தை எடுத்துச் செல்லுங்கள். 
  • உங்கள் கைப்பையில் மருந்துகள் அல்லது மருத்துவச் சாதனங்களை எடுத்துச் செல்கிறீர்கள் எனில், உங்கள் மருந்துப் பரிந்துரைச்சீட்டு அல்லது மருத்துவரின் கடித நகலை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். இது விமானச்சேவை நிறுவனப் பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறையைக் கடக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுதல்

 
Travelling_P2_DVT.png

 

நீங்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், நீங்கள் நீண்ட நேரத்திற்குச் செயல்புரியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இது உங்களை ஆழ்நாளக் குருதியடைப்பு (Deep Vein Thrombosis - DVT) ஏற்படுவதற்கான ஆபத்தில் வைக்கலாம். DVT ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்க உதவுவதற்கான சில வழிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

  • மருத்துவ ரீதியாக முரண்பாடு எதுவும் இல்லையென்றால், அதிகளவு தண்ணீர் அருந்துங்கள்.
  • உங்கள் கணுக்கால்களை வளைப்பது மற்றும் நீட்டிப்பது போன்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
  • சாத்தியமிருந்தால், தொடர்ந்து நடப்பதன் மூலம் சுறுசுறுப்புடன் நீடித்திருங்கள்.

 

Article available in English, Chinese and Malay 

For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.

Back to Top